தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

299

தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜுலை மாதத்தில் மட்டும் தொடர்ந்து மூன்று முறை 30க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை தடுக்க வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாக கூறினார். தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டிய வைகோ, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு வாய்ப்பே இல்லாத நிலை உள்ளதாக தெரிவித்தார்.