காதல் ஜோடியிடம் வம்பிழுத்த இருவரின் மண்டை உடைப்பு!

347
Advertisement

சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியிடம் வம்பிழுத்ததால் ஏற்பட்ட கைகலப்பில் இருவரின் மண்டை உடைப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 10ஆம் தேதியன்று இரவு விவேகானந்தர் இல்லம் எதிரே கடற்கரையில் அமர்ந்திருந்த காதல் ஜோடியிடம் அப்பகுதியிலிருந்த சுமார் 5 பேர் கொண்ட கும்பல் தேவையில்லாமல் வம்பிழுத்துள்ளனர்.

காதல் ஜோடி வேறு இடத்திற்கு சென்றனர்.அப்போது அங்கும் சென்று அவர்கள் வம்பிழுத்ததோடு அவர்களை அந்த கடற்கரையை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த காதலர் தனது செல்போன் மூலம் நண்பர்களை அந்த கடற்கரைக்கு வரவழைத்துள்ளார்.

உடனே கடற்கரைக்கு விரைந்து வந்த அவரது நண்பர்கள் அந்த காதல் ஜோடியிடம் வம்பிழுத்தவர்களை பீர் பாட்டிலைக் கொண்டு சரமாரியாக நடித்துள்ளார்கள்.

இதில் நாகராஜ், பிரதீப் என்ற இருவருக்கும் மண்டை உடைந்தது.

மேலும்,விசாரணையின் பொது காதல் ஜோடியிடம் வம்பிழுத்து மண்டை உடைபட்ட அந்த நபர்கள் வழக்கறிஞர்கள் என்பது தெரியவந்துள்ளது.