கன்னியாகுமரி உப்பள பறவைகள் ஆராய்ச்சி குறிப்பு புத்தகத்தை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  வெளியிட்டார்….

77
Advertisement

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், வனத்துறை மற்றும் பாம்பே இயற்கை வரலாற்றுக்கழகம் சார்பில் குமரி மாவட்ட உப்பள பறவைகள் ஆராய்ச்சி குறிப்பு புத்தகம் வெளியிட்டு விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், மாவட்ட வன அலுவலர் இளையராஜா ஆகியோர் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு குமரி மாவட்ட உப்பள பறவைகள் பற்றிய ஆராய்ச்சி குறிப்பு புத்தகத்தினை வெளியிட்டுட்டார். இப்புத்தகத்தில், கன்னியாகுமரி உப்பாளங்களுக்கு வந்துசெல்லும் பறவைகள், அவற்றின் வகைகள், நடவடிக்கைகள் போன்ற தகவல்கள் இடம்பெற்றிடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.