Saturday, March 22, 2025

கல்யாண பத்திரிக்கை கொடுக்க தொடங்கிய மஞ்சிமா! வைரலாகும் ரைசாவின் போஸ்ட்

நடிகர்கள் மஞ்சிமாவும் கௌதம் கார்த்திக்கும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக முன்னதாக பேசப்பட்டு வந்த நிலையில், அவர்களின் கல்யாணம் நவம்பர் 28ஆம் தேதி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மஞ்சிமா மற்றும் கௌதம் கார்த்திக் திரை பிரபலங்களுக்கு தங்கள் கையாலேயே செய்த திருமண பத்திரிகைகளை கொடுக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Embroidery செய்த இந்த பத்திரிகையின் photoவை ரைசா வில்சன் பகிர்ந்து, பாரம்பரியத்தை பாதுகாக்கும் அருமையான முயற்சி என பதிவிட்டிருந்தார்.

இந்த photo சமூகவலைதளங்களில் வைரலாகி வர மஞ்சிமா கௌதம் திருமணம் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.    

Latest news