விடிவுக்காலம் பிறந்தது தாராவிக்கு

500
Advertisement

தாராவி பகுதிக்கு விடிவுக் காலம் பிறந்துள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி தாராவி. சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட தாராவியில் சுமார் 7 முதல் 10 லட்சம் மக்கள் வசித்துவருகின்றனர். மிகவும் நெருக்கமான இந்தப் பகுதியை இந்தியாவிலுள்ள அனைவரும் நன்கு அறிவர். அடிப்படை வசதிகள் இன்றித் திண்டாடிவந்த தாராவிக்குத் தற்போது விடிவு காலம் பிறந்துள்ளது.

ஆம்…

தாராவியில் இந்தியாவின் மிகப்பெரிய சமூகத் தொகுதிக் கழிப்பறை திறக்கப்பட்டுள்ளது. சுவிதா திட்டத்தின்கீழ் கடந்த சில நாட்களுக்குமுன் 2 மாடிக் கட்டப்பட்டுள்ளக் கழிப்பறையை அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே திறந்து வைத்தார்.

இதில் சமூக கழிப்பறை வளாகத்தில் 111 கழிப்பறைகள் உள்ளன. சுத்தமான தண்ணீர், துணிகளை சலவை செய்வதற்கான வசதிகள் ஆகியவற்றுடன், 50 ஆயிரம் குடியிருப்புவாசிகள் குளிப்பதற்கான வசதிகளும் உள்ளன.

அனைவருக்கும் பாதுகாப்பான சூழல், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள், பெண்களின் சுகாதாரத் தேவைக்கான வசதிகள், துர்நாற்றம் இல்லாத சூழல் ஆகிய வசதிகளுடன் இந்த சமூகக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.

இந்த நவீனக் கழிப்பறையைப் பிரஹன் மும்பைக் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் மற்றும் எச்எஸ்பிசி நிறுவனம் ஆகியவை இணைந்து கட்டியுள்ளன.

இனி, தாராவி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் என நம்பலாம்.