சிப்ஸ் பாக்கெட்டுக்குள் கிடந்த உருளைக்கிழங்கு

256
kettle-chips-pocket
Advertisement

சிப்ஸ் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் சிற்றுண்டி உணவாக உள்ளது. சாதாரண கடைகளில் தயாரிக்கப்படும் சிப்ஸை வாங்கி உண்போரின் எண்ணிக்கையைவிட பெருநிறுவனங்கள் தயாரிக்கும் சிப்ஸை வாங்கி உண்போரின் எண்ணிக்கைதான் அதிக மாக உள்ளது.

இந்த நிலையில் பிரபல நிறுவனத்தின் சிப்ஸ் பாக்கெட்டை வாங்கிய ஒருவருக்கு பெரும் அதிர்ச்சியை தந்திருக்கிறது சிப்ஸ் தயாரிப்பு நிறுவனம்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் டேவிட் பாய்ஸ். ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், பிரபல நிறுவனம் தயாரித்த உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.

அதை ஆசையுடன் பிரித்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பாக்கெட்டின்  உள்ளே குறைவான எண்ணிக்கையில் சிப்ஸ் இருந்திருந்தால் கூட அதிர்ச்சி அடைந்திருக்க மாட்டார். ஆனால், ஒரு முழு உருளைக்கிழங்கு அதில் இருந்தது.

உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டிற்குள் உருளைக்கிழங்கை போட்டு விற்பனைக்கு அனுப்பி இருக்கிறது சிப்ஸ் தயாரிப்பு நிறுவனம்.

உருளைக்கிழங்கை பார்த்து ஏமாற்றமடைந்த டேவிட், தனக்கு நேர்ந்த அனுபவத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இதற்கு பதிலளித்த அந்த நிறுவனம் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டிற்குள் எப்படி வந்தது என்று தெரியவில்லை என்றும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சிப்ஸ் பாக்கெட்டிற்குள் கிடந்த உருளைக்கிழங்கின் படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.