கர்நாடக சட்டமன்ற தேர்தல் பலத்த பாதுகாப்பு இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது….

115
Advertisement

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில், 180 பெண் வேட்பாளர்கள் உட்பட 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்காக கர்நாடகாவில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் 75 ஆயிரத்து 603 வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்படுத்தப்பட உள்ளன.

காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி அனைத்து வாக்குச்சாவடிகளிலும், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் என ஒரு லட்சத்து 56,000 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.