கனியாமூர் பள்ளியில் நடந்த வன்முறை – 18 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை

225

கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த 18 பேர் கொண்ட குழுவை அமைத்து DGP சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி இறப்பு தொடா்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கனியாமூர் வன்முறை தொடர்பாக தற்போது 18 பேர் கொண்ட குழுவை அமைத்து DGP சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 6 டி.எஸ்.பி-க்கள், 9 ஆய்வாளர்கள், 3 சைபர் கிரைம் அதிகாரிகள் வரும் 21ஆம் தேதி சேலம் டி.ஐ.ஜி அலுவலகத்திற்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.