காஞ்சிபுரத்தில் குழந்தைகள் கண்முன்னே மனைவியை வெட்டிய கணவன்

423
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் சின்னாலம்பாடியை சேர்ந்தவர் ரவி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள். இவரது இரண்டாம் மனைவி பெயர் அருணா. இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது .இதனால் அருணா தன் இரு குழந்தைகளோடு தன் தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் பிள்ளைகளின் படிப்புக்காக மீண்டும் சின்னாலம்பாடியில் கணவர் ரவி வீட்டிற்கு மீண்டும் தன் பிள்ளைகளுடன் செல்ல முடிவு செய்தார் . அதற்க்கு முன்பு சாலவாக்கம் காவல்நிலையத்தில் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் தனது கணவர் ரவியும் அவருடைய முதல் மனைவியும் தான் காரணம் என எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்துவிட்டு தன் உறவினர்கள் மற்றும் பிள்ளைகளுடன் கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் காரணமாக ஆத்திரமடைந்த ரவி கையில் அரிவாளை எடுத்து பிள்ளைகளின் கண்எதிரே அருணாவை வெட்ட முயற்சித்திருக்கிறார். இதில் அருணாவிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது . பாதுகாப்பு வேண்டி போலிஸுக்கு முன்னதாக புகார் கொடுத்ததும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர் அருணாவின் உறவினர்கள் .