செல்போனையும் மனிதர்களையும் பிரிக்க முடியாது.
செல்போன் காலத்துக்கு முன்பு தங்களின் சொந்த மற்றும்
தொழில் பற்றிய விவரங்களை நோட்டுப் புத்தகங்களில்
எழுதிவைத்துப் பயன்படுத்திய நிலைமாறிவிட்டது.
தற்போதைய காலத்தில் எல்லா விவரங்களையும்
செல்போனிலேயே பதிந்து வைத்துவருகின்றனர்.
குறிப்பாக, தங்கள் குடும்பத்தினர் பற்றிய விவரம்,
குடும்பப் போட்டோ போன்றவற்றையும் சேமித்து வைத்துள்ளனர்.
இந்தத் தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாகத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, கூகுள் பிளே ஸ்டோரில் பல்வேறு செயலிகள் உள்ளன.
இந்த செயலிகளில் வைரஸ் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கோமெசேஜஸ், ப்ரீகேம் ஸ்கேனர், ஃபாஸ்ட் மேஜிக் எஸ்எம்எஸ்,
சூப்பர் மெசேஜ், எலிமன்ட் ஸ்கேனர், டிராவல் வால்பேப்பர்
போன்ற செயலிகள்மூலம் ஜோக்கர் என்னும் வைரஸ் நுழைந்து
வங்கிக் கணக்குகள், ஓ.ற்றி.பி உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும்
திருடுவதாகக் கண்டறிந்துள்ளனர்.
எனவே, இந்த செயலிகளை உடனே நீக்கிவிடுமாறு குயிக் ஹீல்
ஆன்டிவைரஸ் என்னும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம் எந்தளவுக்கு வசதியாக இருக்கிறதோ
அந்தளவுக்கு ஆபத்தானதாகவும் உள்ளது- ஆகவே, பாதுகாப்பான
முறையில் தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது
உபயோகிப்பாளர்களின் கையில்தான் உள்ளது.