நெல்லிக்குப்பம் நகராட்சி துணைதலைவர் பதவியிலிருந்து திமுகவை சேர்ந்த ஜெயபிரபா ராஜினாமா செய்தார்

233
Advertisement

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற திமுக கவுன்சிலர்கள், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் கட்சியிலிருந்தே நீக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்தார்.

இந்த நிலையில், கடலூர் நெல்லிக்குப்பம் நகராட்சியில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு வென்ற திமுகவை சேர்ந்த ஜெயபிரபா பதவியை ராஜினாமா செய்தார்.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி அமைச்சர் கணேசனிடம் திமுகவை சேர்ந்த ஜெயபிரபா ராஜினாமா கடிதத்தை அளித்தார்.