அவரது 100 வயது பிறந்த நாள் விழாவை குடும்பத்தினர் வெகு விமர்சையாக கொண்டாடினர்.

166
Advertisement

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் காந்தி நகரில் வசிப்பவர் ஜெயலட்சுமி. 1923 ஆம் ஆண்டு பிறந்த ஜெயலட்சுமி, மூன்று தலைமுறைகளை பார்த்த நிலையில், அவரது 100 வயது பிறந்த நாள் விழாவை குடும்பத்தினர் வெகு விமர்சையாக கொண்டாடினர்.

ஜெயலட்சுமி இன்றும் நல்ல ஆரோக்கியத்துடன், திருவட்டத்தில் பட்டு நூலை வேகமாக சுற்றுகிறார். சுறுசுறுப்பாக பணிகளை மேற்கொள்கிறார். இதனை அப்பகுதிமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.