கோப்பையையும் கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பையும் ஒரே நேரத்தில் வென்ற பிறகு பேசிய ஜடேஜா!

227
Advertisement

2023 ஐ.பி,எல் கோப்பையை 5வது முறையாக CSK வென்றுள்ளதால் CSK ரசிகர்கள் அதீத மகிழ்ச்சியில் உள்ளனர்,

CSK –வின் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி இருந்தாலும், வெற்றிக்கு முக்கிய காரணமாக ஜடேஜா இருந்துள்ளார், கடைசி இரண்டு பந்துகளில் 6ஸ் மற்றும் 4ற் அடித்து அசத்தினார்,
எனவே இது குறித்து பேசிய ஜடேஜா முதலில் இந்த வெற்றியை சி.எஸ்,கே அணியின் ஸ்பேஷல் நபரான தோனிக்கு சமர்பிக்கிறேன் என்றார்,
மேலும் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்றபோது, நான் பந்தை மிகவும் வேகமாகவும் பலமாகவும் கடிக்க நினைத்தேன், பந்து எங்கு செல்லும் என்பதைப் பற்றி நான் கவலைப் படவில்லை, ஆனால் நான் என்னை நம்பினேன், மோகித் சர்மா ஸ்லோயர் பந்துகளை வீசுவார் என்று கணித்தேன், இதனால் straight-ஆக அடிக்க திட்டமிட்டேன்.


இதனைத் தொடர்ந்து சி.எஸ்.கே ரசிகர்களையும் ஜட்டு வாழ்த்தியுள்ளார், ஏராளமான ரசிகர்கள் போட்டியைப் பார்க்க வந்தார்கள், மேலும் மழை குறுக்கிட்ட பிறகும் நள்ளிரவு வரை காத்திருந்து போட்டியை முழுமையாக கண்டு மக்கள் ரசித்தார்கள், இதனால் குஜராத்தில் இருந்த அனைத்து சி.எஸ்.கே ரசிகர்களையும் நான் வாழ்த்துகிறேன் என்றார்,
என்னதான் சில CSK ரசிகர்கள் ஜடேஜாவின் திறமையை மட்டம் தட்டினாலும், இந்த ஒரு ஆட்டம் கோடிக்கணக்கான CSK ரசிகர்களின் நெஞ்சங்களை தற்போது கவர்ந்துள்ளது என்று நிச்சயம் சொல்லாம்.