மாத்திரையின் நிறங்களுக்கும் நோய்களுக்கும் உள்ள அர்த்தத்தை தெரிந்துக் கொள்வது அவசியம்….

191
Advertisement

உடலுக்கு காய்ச்சல் போன்ற பல விதமான நோய்கள் ஏற்படும் போது, நாம் மருத்துவரிடம் செல்வோம் அப்போது பல நிறங்களில் அவர் மாத்திரைகளைக் கொடுப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

மாத்திரைகளின் நிறங்களுக்கும், நோய்க்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? ஏன் மாத்திரைகள் பல வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நமது முன்னோர்கள் மூலிகைகளைத் தான் மருந்தாகப் பயன்படுத்தினர். அதன் பின் மூலிகை செடிகளில் இருந்து சாறு எடுத்து மருந்து தயாரித்தனர். அதையடுத்து அவற்றைப் பொடியாக்கி மாத்திரைகள் தயாரித்தனர். மேலும் எகிப்திய கலாச்சாரத்தில் தான் முதன்முதலில் மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. அக்காலத்தில் அந்த மருந்துகள் களிமண்ணில் அல்லது ரொட்டியில் கலந்து தயாரிக்கப்பட்டன.


ஐரோப்பாவில் தொழிற்புரட்சி தொடங்கிய பிறகு, 1960ஆம் ஆண்டு, வெள்ளை மாத்திரைகள் தயாரிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 1975ஆம் ஆண்டு, வண்ணங்களுடைய மாத்திரைகள் தயாரிக்கப்பட்டது, இதனால் மருந்துகளின் நிறத்தில் பல்வேறு வண்ணங்கள் சேர்க்கப்பட்டன.


இப்போது உள்ள மருந்து கடைகளைப் பார்த்தால் பல வண்ணங்களில் மருந்துகள் விற்கப்படுவதைக் காணலாம். சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ணங்களில் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில், மாத்திரையின் தோற்றத்திற்கு பல்வேறு வண்ணங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மருத்துகள் ஏன் பல நிறங்களோடு தயாரிக்கப்படுகிறது தெரியுமா? மருந்துகளின் பெயர்களைப் படித்து வேறுபடுத்திப் பார்க்க முடியாதவர்கள், அவற்றின் நிறத்தைப் பார்த்து மருந்துகளை எளிதில் வேறுபடுத்திக் கொள்ளலாம்.

இதன் காரணமாக, சரியான மருந்தைக் கண்டறிவது அவர்களுக்கு எளிதாகிறது. அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், மருந்துகளின் நிறத்திற்கும், நோய்களுக்கும் சில தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறைவான வீரியமுள்ள நோய்களுக்கும் தீவிரமான நோய்களுக்கும் உள்ள அடிப்படையை வைத்து மாத்திரையின் நிற முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அ