அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் 3.27 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது…

110
Advertisement

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து, இந்திய தொழில் கூட்டமைப்பு குறித்து, இந்திய வேர்கள், அமெரிக்க மண் என்ற தலைப்பில் ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.

அதில், அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் 3.27 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு திட்டங்களுக்காக  8 ஆயிரத்து 178 கோடி ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டுள்ளது என்றும் 163 நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்துள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.