கர்நாடகா சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் ஓபிஎஸ் அணி வேட்பாளராக எம்.நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட்டுள்ளது.

158
Advertisement

கர்நாடகத்தில் மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

சட்டப்பேரவை தேர்தலுக்கான  வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், கர்நாடகாவின் புலிகேசி நகர் தொகுதியில் ஓபிஎஸ் அணி வேட்பாளராக எம்.நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட்டுள்ளது.

முன்னதாக, புலிகேசி தொகுதியில் அதிமுக வேட்பாளளராக அன்பரசன் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று  ஓபிஎஸ் அணி வேட்பாளராக எம்.நெடுஞ்செழியன்  அறிவிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய பலம் தற்போதைய சட்டசபையில் கட்சிகள் பலம் மொத்த இடங்கள் – 224 பா.ஜ.க. – 118 காங்கிரஸ் – 69 மதசார்பற்ற ஜனதா தளம் – 31 சுயேச்சைகள்- 3 காலி இடங்கள் -3 தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.