இந்தியாவை விட்டு துரத்தப்படுகிறதா காங்கிரஸ்?

244
Advertisement

காங்கிரஸ் ஆட்சியை இந்தியாவைவிட்டுத் துரத்துவோம் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். தற்போதைய 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பிரதமரின் கூற்றை நிரூபிப்பதாக அமைந்துள்ளன.

அண்மையில் நடைபெற்று முடிந்த பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் எழுச்சிபெற்று மீண்டும் மிகப்பெரிய கட்சியாக ஆளத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர், அவரது சகோதரி பிரியங்கா ஆகியோர் தீவிரப்பிரசாரம் செய்தனர்.

என்றாலும், தேர்தலுக்குமுன்பும், தேர்தல் நடந்துமுடிந்த பின்பும் வெளியான கருத்துக் கணிப்புகளை ஒட்டியே தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

பஞ்சாபில் தனது ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது காங்கிரஸ் ஆட்சி. அதேசமயம், எந்த அரசியல் பின்புலமும் இல்லாத அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியைத் துடைத்தெறிந்து அசுர பலத்துடன் முதன்முறையாகப் பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்துள்ளது.

மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் ஆளுங்கட்சியான பாஜக தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டு மகத்தான சாதனை படைத்துள்ளது.

இந்தியா முழுவதும் ஆட்சிசெய்த காங்கிரஸ் கட்சி தற்போது சுருங்கி இராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சிசெய்து வருகிறது.

இந்த நிலை தொடர்ந்தால், இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி என்பதே இல்லாமல் போய்விடும் போக்குதான் தற்போது காணப்படுகிறது.