கூடைப்பந்து போட்டியில் சாதனை
படைத்த பார்வையற்ற மாணவி

337
Advertisement

பார்வையற்ற மாணவி கூடைப்பந்து விளையாட்டில்
சாதனை படைத்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி
வருகிறது.

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உயர்நிலைப்
பள்ளி ஒன்றில் பயின்று வருகிறார் ஜுல்ஸ் ஹுக்லாண்ட்.
17 வயதாகும் இந்த மாணவி தனது 3 வயதில் பார்வைத்
திறனை முற்றிலுமாக இழந்துவிட்டாள்.

என்றாலும், சோர்ந்து போகாத அந்தச் சிறுமி கூடைப்பந்து
விளையாடுவதில் ஆர்வம் காட்டினாள். நடுநிலைப் பள்ளியில்
பயிலும்போது கூடைப்பந்து விளையாடத் தொடங்கிய அவள்
விடாமுயற்சியால் வீராங்கனையாக உருவெடுத்துவிட்டாள்.
அவரது மனஉறுதியும் தன்னம்பிக்கையும் ஜுல்ஸ் ஹுக்லாண்டை
சாதனை மாணவி ஆக்கியுள்ளது.

அண்மையில் 2,500பேர் முன்னிலையில் பார்வைத் திறன்
உள்ளவர்களும், பார்வைத்திறன் அற்றவர்களும் இணைந்து
கலந்துகொண்ட கூடைப்பந்து பந்து போட்டி நடைபெற்றது.
அதில் ஒவ்வொரு சீசனிலும் அசத்தலாக ஷாட் அடித்துக்
கூடைப்பந்து வளையத்துக்குள் பந்தைச் செலுத்தி, போட்டியில்
வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டார்.

இதுபற்றிக்கூறியுள்ள ஜுல்ஸ், ”கூட்டத்தினர் அனைவரும்
என்னைப் பார்த்துக்கொண்டிருந்ததால் நான் மிகவும்
பதற்றமாக இருந்தேன். அதிர்ஷ்டவசமாக, அவர்கள்
என்னைப் பார்ப்பதை என்னால் பார்க்கமுடியவில்லை”
என்று தெரிவித்துள்ளார்.

தனது திறமையால் மக்களை வியப்பில் ஆழ்த்திய ஜுல்ஸ்க்கு
இணையத்தில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.