வேலை கிடைப்பதற்காக வாலிபர் செய்த புதுமையான முயற்சி

224
Advertisement

வேலை கிடைப்பதற்காக வாலிபர் மேற்கொண்ட புதுமையான முயற்சி அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த 24 வயது பிஎஸ்சி பட்டதாரி ஹைதர் மாலிக் வேலை வாய்ப்புக்காகத் தனது சுயவிவரங்கள் அடங்கிய பலகையுடன் ரயில் நிலையம்போல் அமைந்த தண்ணீர்க் குழாய்ப் பகுதியில் நின்றுகொண்டிருந்தார். இது அனைவரின் கவனத்தையும் விரைவில் பெற்றது.

அவ்வழியே சென்ற பலர் அந்த வாலிபரையும் பயோடேட்டா பலகையையும் பார்த்ததுடன் தங்கள் நட்புவட்டங்களிலும் பகிர்ந்தனர். அதில் ஒரு இணையதளவாசி தன்னுடைய குழுவில் ஹைதர் மாலிக் பற்றிக் குறிப்பிட்டார்.

அந்தப் பதிவில்,
உங்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருந்தால் தயவுசெய்து இந்த வாலிபரை நேரடியாகத் தொடர்புகொள்ளுங்கள். நாங்கள் கடினமான காலத்தில் வாழ்கிறோம். தற்போது வேலை வாய்ப்பு குறைவாகவே உள்ளது. பட்டதாரிகள் பலர் கடனில் சிக்கிப் போராடி வருகின்றனர். சில வேலைகளுக்குப் பட்டம் தேவையில்லை. ஒரு வாய்ப்பு மட்டுமே தேவை. உங்களால் முடிந்தால் இந்த இடுகையைப் பகிருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த 14 நாட்களில் ஹைதர் மாலிக்கிற்கு புதிய வேலை கிடைத்தது.

இதுபற்றிப் பதிவிட்டுள்ள அவர், எனக்கு வேலை கிடைக்க உதவிய அனைவருக்கும் நன்றி, அனைவரும் இணைந்திருப்போம். ஒன்றாக வளர்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

வாலிபரின் புதுமையான முயற்சியும் சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் உதவும் குணம் கொண்டோரின் ஆதரவும் ஒரு வாலிபருக்கு வேலை கிடைக்கச் செய்துள்ள விஷயம் இணையத்தில் வலம்வருகிறது.