இந்தியன் ரயில்வே நேற்று உள்நாட்டு ரயில் மோதல் பாதுகாப்பு தொழில்நுட்பமான ‘கவாச்’ என்னும் நுட்பத்தை சோதனை செய்தது . இதில், இரண்டு ரயில்கள் முழு வேகத்தில் எதிரெதிர் திசையில் இருந்து ஒன்றையொன்று நோக்கிச் சென்றன . ஆனால், ‘கவசம்’ என்ற தொழில்நுட்பம் காரணமாக, இந்த இரண்டு ரயில்களும் மோதிக் கொள்ளாமல் நின்றுவிட்டன . ரயில்வே துறை பல வருட ஆராய்ச்சிக்கு பிறகு இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
இந்த தொழில்நுட்பம், ‘ஜீரோ ஆக்சிடென்ட்’ என்ற இலக்கை அடைய ரயில்வேக்கு உதவும். சிவப்பு சிக்னலைத் தாண்டியவுடன் ரயில் தானாகவே பிரேக் போட்டுக்கொள்ளுமாம் .மேலும், ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து ரயில்களும் நின்று செல்லும். இது தவிர பின்னால் வரும் ரயிலையும் இந்த கவச தொழில்நுட்பம் பாதுகாக்கும்.
லோகோ பைலட்டான டிரைவர் ஏதேனும் தவறிழைத்தால் கவாச்சானது ஆடியோ-வீடியோ மூலம் முதலில் எச்சரிக்கை செய்யும் . பதில் தரவில்லை எனில் , ரயிலில் ஆட்டோமேட்டிக்காக பிரேக் போடப்படும். இதனுடன், இந்த அமைப்பு ரயிலை நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட வேகமாக இயங்க அனுமதிக்காது. கவச் திழில்நுட்பத்தில் உள்ள RFID சாதனங்கள் ரயில் என்ஜின், சிக்னல் அமைப்பு, ரயில் நிலையம் ஆகியவற்றில் பொருத்தப்படும் . கவாச் தொழில்நுட்பம் ஜிபிஎஸ், ரேடியோ ஸ்பெக்ட்ரம் போன்ற அலைவரிகளால் வேலை செய்யும்.