இந்திய தூதரகம் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை!

299
Advertisement

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 8வது நாளாக போர் நடத்தி வரும் நிலையில் உக்ரைனில் ஆயிரக்கணக்காண இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் சிக்கித்தவித்து கொண்டிருக்கிறார்கள் .

நேற்று முன்தினம் நடந்த குண்டு வீச்சில் கர்நாடகவை சேர்ந்த மாணவன் கொல்லப்பட்ட சம்பவம் மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த மாறி ஒரு இக்கட்டான சூழலில் இந்திய மாணவர்காளை பாதுகாத்து அங்கிருந்து வெளியேற்றி தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கும் பொறுப்பில் உள்ள உக்ரைன் இந்திய தூதரகம் உதவிக்கரம் நீட்டவில்லை எனவும்

தொலைபேசி அழைப்புகளை கூட எடுக்கவில்லை என்பதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

உக்ரைனில் சிக்கி தவிக்கின்ற மாணவ சமூகம் குறித்து.

காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் #SPEAKOFFFOROURSTUDENT என்ற ஹாஷ்டகை இயக்கி வருகிறார்கள்.

அதில் கூறியதாவது “அங்கிருந்து இந்திய மாணவர்களை மீட்டுகொண்டுவருவதில் மத்திய அரசு தனது பொறுப்பை நிறைவேற்ற தவறிவிட்டது .

இந்திய மாணவர்களை அழைத்து வருவதில் இந்திய தூதரகத்தின் பங்குதான் என்ன ?,

மத்திய அரசு தனது பொறுப்பினை நிறைவேற்ற தவறி இருக்கிறது.

தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் வெளிவந்து மக்களை அச்சுறுத்துகின்றன.

இந்தியாவின் இதயம் உடைந்து விட்டது என தொடர்ந்து பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் தங்களது கஷ்டங்களை யாரிடம் பேசி சரி செய்வது என்று தெரியாமல் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களும் இந்திய மாணவர்களும் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.