இந்திய மாணவர்கள் 5 பேர் கனடாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர்

509
Advertisement

கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா தனது ட்விட்டர் பதிவு மூலம் அதிர்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் ,அதில் இந்திய மாணவர்கள் 5 பேர் டொரான்டோஅருகே நடந்த சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்திருப்பது துயரத்தை அளிக்கிறது என்றும், காயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் . மாணவர்கள் வேனில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக டிராக்டர் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.அவர்கள் அனைவரும் கனடாவின் கிரேட்டர் டொரான்டோ மற்றும் மான்ட்ரியல் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.