உக்ரைனை விட்டு வெளியேற மறுக்கும் இந்திய மாணவர்!

460
Advertisement

உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர் ஒருவர் அந்நாட்டை விட்டு வெளியேற மறுத்துள்ளார் ..இதற்கு அவர் கூறிய காரணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் , அங்குள்ள இந்தியர்களை பத்திரமாக இந்தியா அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது .

ரஷ்ய படை தாக்க அதிக வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து …பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல இந்தியர்களக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே , விமானங்கள் மூலம் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் அழைத்துவரப்பட்டுள்ள நிலையில், மேலும் அங்கு சிக்கி உள்ள இந்திய மாணவர்களை அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது …

இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் ரேடியோ எலக்ட்ரானிக்ஸில் படிக்கும் இந்திய மாணவர் ரிஷப் கௌஷிக் , தனது செல்ல நாய்க்குட்டி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற மறுத்துள்ளார்.

இதனால் அவர் வெளியேறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் , தான் வளர்க்கும் செல்ல நாய் குட்டியை விட்டுவிட்டு இந்தியா வரமுடியாது.அதனையும் தன்னோடு அழைத்துக்கொண்டு இந்தியாவுக்கு வர அனைத்து சட்ட நடைமுறைகளையும் உரிய விதிமுறைகளை தான் பின்பற்றுவதாகவும் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறுகிறார்.

இருப்பினும் அதிகாரிகளால் அலைகளிக்க படுவதாக குற்றம் சாட்டியுள்ளார் . இதையடுத்து அவர் இந்திய அரசிடம் தனது முறையீட்டை முன்வைத்துள்ளார்.