பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிடும் இளம்பெண்கள்

121
Advertisement

2019இல் இருந்து 2021ஆம் ஆண்டு வரைக்கும் National Health Family Survey எடுத்த கணக்கெடுப்பின்படி நடத்திய ஆய்வில், பெரும்பாலான மாணவிகள் குழந்தை திருமணம் மற்றும் வீட்டு வேலை காரணங்களால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிடுகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2019ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை கைவிட்ட பெண்களின் எண்ணிக்கை 21,800 ஆகும்.

இதில் 13 சதவீதம் பேர் வீட்டுவேலை செய்வதாலும், 7 சதவீதம் பேருக்கு திருமணம் ஆனதாலும் படிப்பை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement

அதே காலகட்டத்தில் பதிவான நிலவரப்படி,  20,084 மாணவர்களும் பள்ளிப்படிப்பை நிறுத்தியுள்ளனர்.

ஆனால், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வெளியே சென்று வேலை செய்து பணம் ஈட்டுவதில் ஆண்களே முன்னிலை வகிக்கின்றனர்.

பாலின பாகுபாட்டின் காரணமாக, அந்த வாய்ப்புகளும் பெண்களுக்கு மறுக்கப்பட்டு, வீட்டு வேலை போன்ற நிதி வருவாய் இல்லாத வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்த படுவதாக அறிக்கை கூறுகிறது.

பொதுவான, கல்வி கற்கும் வருடங்கள் பெண்களுக்கு 4.4இல் இருந்து 4.9 வருடங்களாகவும், ஆண்களுக்கு 6.9இல் இருந்து 7.3 ஆகவும் உயர்ந்து இருந்தாலும், அதிலும் பெண்களின் நிலை பின்தங்கி இருப்பது சமூக ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.