மருந்து மற்றும் நிவாரணப் பொருட்களை உக்ரைனுக்கு அனுப்பும் இந்தியா

266
Advertisement

ரஷ்யாவின் ராணுவ தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், நிவாரணப் பொருட்கள், போன்றவற்றை இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் இன்று அனுப்ப இந்திய திட்டமிட்டுள்ளது.

அந்தப் பொருட்கள் ருமேனியா, போலந்து ஆகிய நாடுகளில் இறக்கப்பட்டு அங்கிருந்து உக்ரைனுக்கு எடுத்துச் செல்லப்படும்.இதைப்போலவே தொடர்ந்து சில விமானங்கள் மூலம் மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
100 கூடாரங்கள், 2,500 போர்வைகள், மருந்துகள், உணவுப் பொருட்கள் போன்றவை இன்றைய முதல் விமானத்தில் அனுப்பப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி உக்ரைனுக்கு இந்த உதவிகள் செய்யப்படவுள்ளன.