திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு!

248

திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த 3 நாட்களாக நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் அதிகரித்து சென்று கொண்டிருக்கிறது. இதனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், திருப்பூர் நகரம் மற்றும் மாவட்டத்தில் பிற பகுதிகளில் நொய்யல் ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு ஒலிப்பொருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் அறிவுறுத்தியுள்ளார்.