செயலற்ற திமுக அரசு இபிஎஸ் கடும் விமர்சனம்

404
Advertisement

திமுக ஆட்சியில் வருவாய் அதிகரித்திருந்தாலும், அதிகமான கடன் வாங்கியுள்ளனர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

2022 2023 ஆம் ஆண்டு தமிழக வரவு செலவுத் திட்டம் பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள அவர், கல்விக் கடன் பற்றியும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக பட்ஜெட் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,

2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை விட்டுச்செல்லும்போது தமிழ்நாட்டுக்கு சுமார் 4.8 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. மூலதனச் செலவுகளுக்காகவே அதிமுக ஆட்சியில் கடன் வாங்கப்பட்டது.

2021 2022 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 1 லட்சத்து 8 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. வாங்கிய கடனுக்கு இதுவரை எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில், 2022 2023 ஆம் ஆண்டுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெறப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ஆண்டுகளிலும் மொத்தம் 2 லட்சத்து 28 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.

10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் 4 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்தான் கடன் இருந்தது.

கொரோனா தொற்று இருந்ததால், அதிமுக ஆட்சியில் வருவாய் குறைந்தது. எவ்விதத்திலும் அரசுக்கு வருவாய் கிடைக்கவில்லை. அதனால், வரவு குறைந்து செலவு அதிகமாக இருந்தது.

திமுக ஆட்சியில் தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. போக்குவரத்து, பத்திரப் பதிவில் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. திமுக ஆட்சியில் வருவாய் அதிகரித்தாலும் அதிக கடன் வாங்கியுள்ளனர். எனவே, திமுக அரசு சரியாக செயல்படவில்லை என்று தெரிகிறது என்று குறைகூறியுள்ளார்.