திருவண்ணாமலையில் கழிவுநீரோடு, சாலையில் தேங்கிய மழைநீரில், மதுபோதையில் ஒருவர் நீச்சல் அடித்து விளையாடும் காட்சிகள் வெளியாகி உள்ளது….

157
Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால், அண்ணா நகர். நல்லவன் பாளையம். கீழ் அணைக்கரை.

உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இந்த மழையினால் திருவண்ணாமலை நகரப் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சாலைகளில் கழிவு நீரோடு சேர்ந்து மழை நீரும் பெருக்கெடுத்து ஓடியது. பெரியார் சிலை அருகே சாலையில் தேங்கியிருந்த நீரில், மதுபோதையில் இருந்த நபர் நீச்சல் அடித்து விளையாடும் காட்சிகள் வெளியாகி உள்ளது. சாலையில் உள்ள நீரில் உருண்டு புரண்டு ஆட்டம் போட்ட நபரால், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.