புனேவில், தனியார் பேருந்து மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

115
Advertisement

மகாராஷ்ரா மாநிலம், சதாராவிலிருந்து தானேவில் உள்ள டோம்பிவிலி நோக்கி பயணிகளை ஏற்றி கொண்டு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில், புனே – பெங்களூர் நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பின்னால் சாக்கரை ஏற்றி வந்த லாரி ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து பேருந்தின் மீது மோதியது. இதில், லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.