புதுச்சேரியில், ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

254

புதுச்சேரியில், ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். திருபுவனை அருகே உள்ள சன்னியாசிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் 3வது மகள் கீர்த்தனா, அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், முகேஷ் என்ற இளைஞர் கீர்த்தனாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலுக்கு கீர்த்தனா மறுப்பு தெரிவித்ததால், அவரை சந்தித்து முகேஷ் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று கல்லூரி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த கீர்த்தனாவை முகேஷ் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கீர்த்தனா பரிதாபமாக உயிரிழந்தார். அங்கிருந்து தப்பிச்சென்ற முகேஷை போலீசார் தேடி வருகின்றனர்.