புதுச்சேரியில் இபிஎப் பென்ஷன்தாரர்கள் மணி அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

158
Advertisement

புதுச்சேரியில்  இபிஎப் பென்ஷனர்கள் சங்கம் சார்பில் 100 அடி சாலையில் உள்ள இபிஎப் அலுவலகம் முன்பு மணி அடித்து எழுப்பும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில்,  குறைந்தபட்ச பென்ஷனாக 9 ஆயிரம் ரூபாய் பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும், இஎஸ்ஐ திட்டத்தை விரிவாக்கம் செயய வேண்டும், நேரடியாக மனுக்களை பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.