அரியலூரில், அண்ணன் – தம்பி இடையே ஏற்பட்ட தகராறில் அண்ணன் தாக்கியதில் தம்பி பரிதாபமாக உயிரிழந்தார்…

85
Advertisement

ஜெயங்கொண்டம் அருகே, இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ராஜேந்திரன், சங்கர் இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், சங்கருக்கும் – ராஜேந்திரனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் இருவருக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், ராஜேந்திரன் தனது குடும்பத்தினருடன் இணைந்து சங்கரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சங்கரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜேந்திரன் மற்றும் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.