அமெரிக்காவில், ஏரியில் மூழ்கி இந்திய மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

116
Advertisement

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த ஆர்யன் வைத்யா, சித்தாந்த் ஷா ஆகிய 2 மாணவர்கள் படித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் கடந்த 15ம் தேதி நண்பர்களுடன் சேர்ந்து இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள மன்ரோ ஏரிக்கு சென்றனர். அங்கு அவர்கள் படகு சவாரி சென்றனர். பின்னர் அவர்கள் படகை ஏரியின் நடுப்பகுதியில் நிறுத்திவிட்டு ஏரியில் குதித்து நீச்சல் அடித்து மகிழ்ந்தனர். அப்போது, ஆர்யன் மற்றும் சித்தாந்த் திடீரென நீரில் மூழ்கி மாயமாகினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாயமான ஆர்யன் மற்றும் சித்தாந்த்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஏரியில் மூழ்கி மாயமான ஆர்யன் மற்றும் சித்தாந்த் உடலை மீட்டனர்.