“இம்ரான் கான் தலையில் இருந்து ஒரு முடி விழுந்தால் கூட தற்கொலை தாக்குதல் நடத்தப்படும்”

176

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டதாக தகவல் பரவியதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இம்ரான் கானை காயப்படுத்தினால் தற்கொலை தாக்குதல் நடத்துவேன் என்று பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் அத்தாவுல்லா மிரட்டல் விடுத்துள்ளார்.

இம்ரான் கானின் தலையில் இருந்து ஒரு முடி விழுந்தால் கூட,  நீங்களும் உங்கள் குழந்தைகளும் இருக்க மாட்டீர்கள் எனவும் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

முதலில் தான் தற்கொலை தாக்குதல் நடத்துவேன் என்றும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்த தயாராக உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்தாவுல்லாவின் மிரட்டல் அந்நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.