திருப்பத்தூர் மாவட்டம் கதிரம்பட்டி அருகே சட்டவிரோதமாக கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை ஸ்கேன் மூலம் கண்டறிந்து வருவதாக புகார் வந்தது. இதுதொடர்பாக சென்னை சுகாதாரத்துறை கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், திருப்பத்தூர் அடுத்த கதிரம்பட்டியில் காட்டுப் பகுதியில் கூடாரம் அமைத்து, ஸ்கேன் மூலம் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவித்து கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சுகுமார் மற்றும் வேடியப்பன் இரண்டு பேரும் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து ஸ்கேன் செய்யும் கருவி மற்றும் 75 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். சுகுமார் இதே குற்றத்திற்காக பல முறை சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் அருகே சட்டவிரோதமாக ஸ்கேன் செய்து, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவித்து, பணம் பறித்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
Advertisement