அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து

326
Advertisement

கரீபியன் தீவில் அமைந்ததுள்ள நாடான ஹைதியில் கடந்த ஓர் ஆண்டாக அரசியல் நிலைப்புத்தன்மையிலும் , பொருளாதாரத்திலும் பெரும் பின்னடைவு நிலவுகிறது . அந்நாட்டு அதிபர் ஜோவினல் மொசி சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி ஹைதியில் சென்ற ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர் .இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது அகதிகளாக வெளியேறி வருவதோடு , கடல் மார்கமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் படகு ஒன்றில் 300-க்கும் மேற்பட்ட அகதிகளுடன் , அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு உள்பட்ட கடல்பரப்பு வழியாக நுழைய முற்படும்போது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும் கடலில் மூழ்கினர்.

உடனடியாக அமெரிக்க கடலோர காவல் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டதால் பெரும்பாலானவர்கள் மீட்கப்பட்டனர் . மேலும், வேறு யாரேனும் கடலில் மூழ்கியுள்ளனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.