தேர்தலில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சவுக்கு சங்கரை நிற்க வைப்பேன் – சீமான்

229

தேர்தலில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சவுக்கு சங்கரை நிற்க வைப்பேன் என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் சீமானை, அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய சீமான், பிறந்தநாள் வந்தால் தான் மக்களுக்கு நலத்திட்டம் வழங்குவீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

தேர்தலில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சவுக்கு சங்கரை நாம் தமிழர் கட்சியில் நிற்க வைப்பேன் என்று கூறினார். அதிகாரத்தில் இருக்கும் காரணத்தினால் விமர்சிப்பவர்களின் குரல் வலைகளை நெரிப்பதாக கூறிய சீமான், இந்நாட்டில் வரி செலுத்தும் ஒவ்வொரு குடிகமனுக்கும் கேள்வி கேட்க தகுதி உள்ளது என்று தெரிவித்தார்.