மின்னல் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி?

309
Advertisement

மின்னல் மின்னத் தொடங்கியதும் சட்டென்று அருகிலுள்ள
பெரிய கட்டடங்கள் அல்லது காருக்குள் புகுந்து கொள்ளுங்கள்

திறந்த வெளி, மலைப்பகுதிகளில் இருந்தால் உடனடியாக
அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும்.

பதுங்கிக்கொள்ள இடமில்லையெனில், கால்களை ஒன்றிணைத்து
குனிந்தபடி முழங்காலைக் கட்டிக்கொண்டு முடிந்தவரை உடலைக்
குறுக்கிக்கொண்டு உட்கார்ந்துகொள்ள வேண்டும். இதன்மூலம் மின்னல்
தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

உயரமாக வளர்ந்துள்ள மரம் அல்லது தனி மரம் ஆகியவற்றின்
அருகில் நிற்கக் கூடாது.

தண்ணீருக்குள் இருந்தால் உடனடியாகக் கரைக்குத் திரும்பிவிட
வேண்டும். தொலைவிலிருந்தும் மின்னலைக் கடத்தும் திறன்
தண்ணீருக்கு உண்டு.

வீட்டுக்குள் இருந்தால் தொலைக்காட்சிப் பெட்டி மின் இணைப்பு,
செல்போன் சார்ஜ் ஏற்றுதல், தொலைபேசி இணைப்பு, குழாய் இணைப்பு
போன்றவற்றைத் தற்காலிகமாகத் துண்டித்துவிட வேண்டும். ஏனெனில்,
இந்த இணைப்புகள் மூலம் மின்னல் கடத்தப்பட நிறைய வாய்ப்புகள் உண்டு.

உடலில் நேரடியாக மின்னோட்டம் நுழையும் உலோகங்கள், குடை
போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

இடி, மின்னல் போன்றவற்றுடன் மழைபெய்யத் தொடங்கும்போது
வீட்டைவிட்டு வெளியே செல்வதையும், தெருவில் நடமாடுவதையும்
தவிர்க்க வேண்டும். மின் ஒயர்கள் அறுந்து தண்ணீருக்குள் கிடக்கலாம்.
அத்தோடு மின்னலும் தெருவில் தேங்கி நிற்கும் மழைநீருக்குள் விழுந்து
உயிரினங்களையும் தாக்கும்.