இதெல்லாம் சரியா இருந்தா தான் கார்ல Airbag வேலை செய்யும்

252
Advertisement

காரில் செல்லும் போது விபத்து ஏற்பட்டால், உள்ளிருக்கும் பயணிகளின் உயிரை காப்பாற்றுவதில் air bag முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒரு முறை விபத்தின் போது air bag விரிவடைந்து விட்டால், மீண்டும் அதை reset செய்து வைத்தால் தான் செயல்படும்.

நம் காரில் உள்ள air bag சரியான நிலையில் உள்ளதா என்பதை தெரிந்து வைத்து கொண்டால், எதிர்பாராத நிகழ்வுகளின் போது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

காரின் dashboardஇல் உள்ள airbag warning light ஒளிர துவங்கினால், airbagஇல் ஏதோ சிக்கல் ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.

இந்த சிக்கல்களை கண்டறிந்து சரிசெய்யா விட்டால், விபத்தின் போது airbag செயல்படாமல் போக வாய்ப்புள்ளது.

கார் எங்காவது லேசாக இடித்து கொண்டால், airbag விரிவடையவில்லை என்றாலும், சென்சார்களில் பதிவான மோதல் காரணமாக warning light எரியும்.

அதே போல், காரில் அமர்ந்திருப்பவர்கள் seatbelt சரியாக அணியவில்லை என்றாலும் கூட இதே போல் நடக்கும். இது போன்ற சமயங்களில் reset செய்தலே போதுமானது.

காரின் இருக்கைகளுக்கு அடியில் இருக்கும் wireகள் சேதமானாலோ அல்லது காரின் backup battery வறண்டு போய் இருந்தாலும் airbag warning light எரியும். அப்போது reset செய்வது மட்டுமின்றி, batteryயை மாற்றி காரில் உள்ள சென்சார்களையும் reset செய்வது அவசியம்.

மேற்குறிப்பிட்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு, காரை பராமரித்து வந்தால் airbag தேவையான நேரத்தில் சரியாக செயல்படுவதை உறுதி செய்யலாம்.