சிபிஐ விசாரணை உத்தரவை எதிர்த்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை எப்படி விசாரிக்க முடியும்? -உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு கேள்வி

224

சிபிஐ விசாரணை உத்தரவை எதிர்த்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை எப்படி விசாரிக்க முடியும்? என உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இதே அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்றும், அனைத்து வழக்குகளும் சிறப்பு அமர்வுதான் விசாரிக்க வேண்டும் என்ற நிலையில், தனி நீதிபதி விசாரித்து உத்தரவிட்டது தவறு என்று பொன்மாணிக்கவேல் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது யார் எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பது குறித்து தலைமை நீதிபதிதான் முடிவெடுப்பார் என்று தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தலைமை நீதிபதியிடம்தான் முறையீடு செய்ய வேண்டும் என்றும், தாங்கள் எப்படி விசாரிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினர்.

பின்னர், இந்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட வழக்கை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களில் மனுதாரர் வாதத்தை பரிசீலித்து உத்தரவிடுவதாக தெரிவித்தனர்.