தளபதி 67 போஸ்டரில் மறைந்துள்ள தரமான குறியீடுகள்! எகிறவைக்கும் எதிர்ப்பார்ப்புகள்

161
Advertisement

இரண்டே நாட்களில் சமூகவலைதளங்கள் முழுவதையும் ஆக்கிரமிக்க தொடங்கி விட்டது ‘தளபதி 67’ அப்டேட்கள். படத்தில் நடிக்க போகும் நடிகர்கள், ஷூட்டிங் ட்ரிப், டைட்டில் ப்ரோமோ வீடியோ என அடுத்தடுத்த அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், படத்தின் போஸ்டரில் மறைந்துள்ள குறியீடுகளை நெட்டிசன்கள் கண்டுபிடித்து வருகின்றனர். சிகப்பு நிறத்தில் உள்ள poster font இரத்ததை குறிப்பதால், வலுவான action கதைக்களம் இருக்க வாய்ப்புள்ளது.

தளபதி 67 போஸ்டரை தலைகீழாக பார்க்கும் போது LCU போல தெரிவதால், இந்த படம் LCUவுக்குள் வரும் என விஜய் ரசிகர்கள் ஆழமாக நம்புகின்றனர். போஸ்டரில் தளபதி fontஐ உற்று நோக்கினால், தேள் போன்ற அமைப்பு தெரிகிறது. கைதி படங்களில் Drug Mafiaவுடன் தொடர்பு படுத்தப்படும் scorpion referenceக்காக இது வைக்கப்பட்டு இருக்கலாம்.

Eagle போன்ற அமைப்பை கொண்டிருக்கும் தளபதி 67 font, விக்ரம் படத்தின் Eagle is coming referenceஇன் தொடர்ச்சியாக விஜய் பயணிப்பதை உணர்த்தலாம். படம் confirm ஆன போது விஜயும் லோகேஷும் வெளியிட்ட photoவில் விஜயின் கையில் உள்ள ரத்தமும், தளபதி 67 வேற லெவல் action படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.