மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

254

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரையில் நேற்றிரவு திடீரென மழை பெய்தது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இந்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்ததது. இனாம்மணியாச்சி, நாலாட்டின்புதூர், திட்டங்குளம், இளையரசனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.