ஓடும் பஸ்ஸில் டிரைவருக்கு மாரடைப்பு பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிரிழந்தார்

357
Advertisement

பொன்னேரியிலிருந்து பழவேற்காட்டிற்கு டி 28 என்ற வழித்தட எண் கொண்ட அரசு பஸ் இயக்கப்படுகிறது.
இந்த பஸ்சை டிரைவர் கோலப்பன் என்பவர் ஓட்டி சென்றார்.
அந்த பஸ் இன்று அதிகாலை 4 மணி அளவில் பழவேற்காட்டில் இருந்து பொன்னேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பாரதிநகர் என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருக்கும் போது கோலப்பனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் நிலை தடுமாறிய கோலப்பன் பஸ்ஸை சாமர்த்தியமாக சாலையோரம் நிறுத்தினார்

பின்னர் டிரைவர் கோலப்பனை ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்,இவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.