தோனிக்கு பதிலாக இவர் தான் கேப்டனா வரனும்! முன்னாள் வீரரின் பரபரப்பு கருத்து..!

177
Advertisement

16வது சீசன் IPL  போட்டிகள் CSK ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் கொண்டாட்டத்தையும் மாறி மாறி வழங்கி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் போராடி தோல்வி பெற்ற நிலையில், அடுத்த போட்டி CSKவுக்கு சாதகமாக அமையுமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்திய அணி மற்றும் முன்னாள் CSK வீரருமான கேதார் ஜாதவ் CSK அணியின் அடுத்த கேப்டன் குறித்து பேசியுள்ளார். இந்த IPL தொடரே தோனி விளையாட உள்ள கடைசி IPL போட்டியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ருதுராஜ் கெய்க்வாட் CSK அணியின் அடுத்த கேப்டனாக வருவது சிறந்த தேர்வாக இருக்கும் என கூறி இருக்கும் கேதார் ஜாதவ், பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தால் அவரும் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் தான் என கருத்து தெரிவித்துள்ளார். கடந்த வருட போட்டியில் ஜடேஜாவுக்கு கேப்டனாக இருக்க வாய்ப்பு வழங்கப்பட்ட போதும், அதிக அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் அவர் பாதியிலேயே தோனியிடம் மீண்டும் பொறுப்பை ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.