குக்கர் காபி குடிச்சிருக்கீங்களா?

253
Advertisement

https://www.instagram.com/reel/CWGFHF3Itxr/?utm_source=ig_web_copy_link

சமூக வலைத்தளங்களில் குக்கர் காபி வைரலாகி வருகிறது.

காபி பலரின் வாழ்வோடு ஒன்றிவிட்டது. காலையில் எழுந்திருக்கும்போதே பெட் காபி பருகினால்தான் அநேகம்பேருக்குப் பொழுதே விடியும். அந்தக் காபியையும் விதம்விதமாகத் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர் வியாபாரிகள்.

பில்டர் காபியே பலரின் விருப்பமானதாக இருந்தாலும், நடைமுறையில் எல்லா நேரத்திலும் அது சாத்தியமில்லை என்பதால், காபி மேக்கர் எந்திரம் வந்துவிட்டது. ரெடிமேடு காபியும் வந்துவிட்டது. இன்னும் ஒருபடி மேலேபோய் குக்கர் காஃபி வந்துள்ளது. அதுவும் தெருவிலே விற்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் ஒன்றில் பகிரப்பட்டுள்ள வீடியோ ஒன்றில் உணவு சமைப்பதற்கான பிரஷர் குக்கரைப் பயன்படுத்தி சைக்கிளில் டீக்கடை நடத்தும் வியாபாரி ஒருவர் நுரை பொங்க காஃபி தயார்செய்கிறார். அந்தக் குக்கர் காஃபியைப் பார்க்கும்போதே பருக வேண்டும் என்கிற ஆவல் மேலோங்குகிறது.

இணையவாசிகளை வேற்றுலகுக்கு அழைத்துச் செல்கிறது இந்தக் குக்கர் காஃபி.

ஹாய் புரோ…

வாங்க

குவாலியர் போய் ஒரு குக்கர் காஃபி சாப்டலாம்….