டூத் பேஸ்ட் காபி பருகியிருக்கிறீர்களா?

396
Advertisement

https://www.instagram.com/reel/CU-gnGbIRk1/?utm_source=ig_web_copy_link

பில்டர் காபி, பிளாக் காபி, சுக்குக் காபி, பூனைப் புனுகு காபி, யானைக் காபி போன்ற காபி வகைகள் நமக்குத் தெரியும். ஆனால், டூத் பேஸ்ட் காபியை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் தனது ட்டுவிட்டரில் டூத்பேஸ்ட் காபி தயாரிப்பு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் ஒருவர் முதலில் பாத்திரத்தில் பற்பசையைக் கலக்குகிறார். பிறகு, அதனுடன் பால் மற்றும் காபித் தூளை சேர்க்கிறார். சுவைக்காக அதில் பெப்பர்மின்ட் மாத்திரைகள் சிலவற்றைப் போடுகிறார். அவ்வளவுதான் டூத் பேஸ்ட் காபி தயார்.

டூத்பேஸ்டை உட்கொள்வது தீங்கிழைக்கும் என்று தெரிந்தாலும், வீடியோவில் காணும் மனிதர் வெவ்வேறு விதமான உணவுகளையும் பானங்களையும் தயார்செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வித்தியாசமான உணவு வகைகள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுவது புதிதல்ல. ஆனால், ட்டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள டூத்பேஸ்ட் காபி, காபி பிரியர்களை மட்டுமன்றி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கிறது டூத் பேஸ்ட் காபி.