https://www.instagram.com/reel/CXJPC3DgC4Q/?utm_source=ig_web_copy_link
சமூக ஊடகத்தில் கருப்பு இட்லி அவிக்கும் வீடியோ வைராகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் நகரில் வாக்கர்ஸ் தெருவிலுள்ள ஆல் அபவுட் இட்லி என்னும் உணவகத்தில் வேக வைக்கப்படும் கருப்பு இட்லி பிரபலமாகி வருகிறது.
இதுதொடர்பான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் கருப்பு இட்லி அவித்த பிறகு அதில் நெய் ஊற்றி அதன் மீது மிளகாய்ப் பொடி தூவி, தேங்காய்ச் சட்னி ஊற்றி சாப்பிடுவதற்குப் பரிமாறுகிறார்கள்.
இதைப் பார்த்த இட்லியைப் பற்றி அறியாதவர்கள் கருப்பு இட்லி சமைப்பதை நிறுத்துங்கள் என்கிற விதத்தில் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால், தமிழர்களுக்குத் தெரியும் இந்த கருப்பு இட்லி நவதானியங்களில் ஒன்றான கேழ்வரகு இட்லி என்பது.
பல வருடங்களுக்குமுன்பு பலரின் வீடுகளில் நாட்டுச் சோளத்தால் இட்லி அவிக்கப்பட்டு சாப்பிட்டவர்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தனர் என்பது இன்றைய பெரியவர்களுக்கு நன்கு தெரியும்.
தமிழர்களின் பாரம்பரிய உணவான இட்லி உலகம் முழுவதும் புகழ்பெற்றது. எந்த நாட்டுக்குச் சென்றாலும் இட்லியை ஹோட்டல்களில் சாப்பிடலாம். தமிழர்கள் மட்டுமன்றி, பிற மாநிலத்தவர்களும் பிற நாட்டவர்களும் இட்லியை விரும்பி சாப்பிடுகின்றனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆரோக்கியமானவர்கள் முதல் நோயாளிகள் வரை அனைத்து தரப்பினருக்கும் எல்லாக் காலத்திலும் சாப்பிடுவதற்கேற்ற உணவு இட்லி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
எப்படியோ பழமையே புதுமையாகி மக்களின் ஆரோக்கியம் காக்க வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.