Harry Potter Watch

135
harry-potter-watch
Advertisement

ஹாரிபார்ட்டர் நாவலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் ஹாரி பார்ட்டர் ஸ்மார்ட் வாட்சை ஒன் பிளஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஹாரி பார்ட்டர் கதாப்பாத்திரங்களை Theme-களாக கொண்ட ஸ்மார்ட் வாட்ச்சை ஒன் பிளஸ் நிறுவனம் சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த வாட்சை 21-ஆம் தேதி பிற்பகல் முதல் ஒன்பிளஸ் இணையதளம் வழியாக வாங்கலாம்.

ஹாரி பார்ட்டர் வாட்ச் உடல் நலனில் அதிக கவனம் செலுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, நடைப்பயிற்சி, யோகா, கிரிக்கெட், நீச்சல் என 110 விதமான வொர்க்-அவுட் மோட்களை கொண்டுள்ளது. மேலும், இரத்த ஆக்சிஜன் அளவிடுதல், அதிக அளவிலான நாடித்துடிப்பு இருக்கும்போது எச்சரித்தல் போன்ற அம்சங்களும் ஹாரி பார்ட்டர் ஸ்மார்ட் வாட்ச்சில் அடங்கியுள்ளன.

செல்போன் எண்ணுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி அறிவிப்புகளையும் இதில் கையாள முடியும். இந்த ஸ்மார்ட் வாட்சின் விலை 16,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.