ஆசிய மக்களுக்கு 25 வயதிலிருந்து தலைமுடி
நரைக்கத் தொடங்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மெலோசைட்ஸ் என்னும் நிறமியே தலைமுடி மற்றும்
தோலுக்கு நிறத்தைக் கொடுக்கிறது. தோலில் உள்ள
மெலோசைட்ஸ் குறையத் தொடங்கினால், தலைமுடி
நரைக்கத் தொடங்கும்.
பரம்பரை இளநரை, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும்
தைராய்டு ஹார்மோன் பிரச்சினை போன்றவற்றுக்காக
நீண்டகாலம் மருந்து சாப்பிடுவது, மன அழுத்தம், புற
ஊதாக்கதிர்களின் பாதிப்பு போன்ற காரணங்களால்
இளநரை ஏற்படலாம்.
நோய்ப் பாதிப்பின் காரணமாகவோ சத்துக் குறைபாடுகளாலோ
ஏற்படும் இளநரையை எளிதில் சரிசெய்யலாம்.
இளநரை ஏற்பட விட்டமின் பி12 சத்துக் குறைபாடு முக்கியக்
காரணியாக விளங்குகிறது. விட்டமின் 12, பி6, புரோட்டின்,
இரும்பு, தாமிரம் போன்ற சத்துகள் இளநரை வராமல் தடுப்பதில்
முக்கியப் பங்காற்றுகிறது. அதனால், உணவில் இந்த சத்துகள்
இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும்.