கோல்டு பாபா

294
Advertisement

விலைகுறைவான முகக் கவசத்தையே சிலர் வாங்கவோ
அணியவோ மறுக்கிறார்கள். இந்த சூழலில் உத்தரப்பிரதேச
மாநிலம், கான்பூரைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் 5 லட்ச ரூபாய்
செலவில் முகக்கவசம் செய்து அணிந்து அனைவரின் கவனத்தையும்
ஈர்த்துள்ளார்.

ஷிவ் சரன் மாஸ்க் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த முகக் கவசம்
மும்பையில் செய்யப்பட்டுள்ளது- இந்தத் தங்க முகக் கவசம்
செய்வதற்கு 3 வருடங்கள் ஆனதாகத் தெரிவித்துள்ளார் இதை
அணிந்துவரும் மனோஜ் ஆனந்த்.

இந்த வகை முகக் கவசம் செய்வது இந்தியாவிலேயே
இதுதான் முதன்முறை என்று கூறப்படுகிறது.

தங்கத்தின்மீதான மோகத்தின் காரணமாக இவ்வாறு
தங்க முகக் கவசம் அணிந்துள்ளதாகக் கூறும் இவர்
கால்கிலோ எடையுள்ள நான்கு தங்கச் செயின்களையும்
அணிந்துள்ளார்.

செயின்களைத் தவிர்த்து பெண்கள் அணியும் நெக்லஸ்போல்
கழுத்தைச் சுற்றியும் 2 கிலோ எடைகொண்ட தங்க நகைகளையும்
அவ்வப்போது அணிகிறார்.

மேலும், ஒரு ஜோடி கடுக்கண், மூன்று இடைவார் (பெல்ட்),
ஒரு துப்பாக்கி உறை போன்ற தங்கத்தாலானவற்றையும்
பயன்படுத்துகிறார். கடந்த பத்து வருடங்களாக தங்க நகைகள்மீது
மோகம்கொண்டுள்ளதாக ஆனந்தமாகக் கூறுகிறார் இந்த மனோஜ் ஆனந்த்.

தங்க ஆபரணங்கள் அணிந்துவருவதால் குற்றவாளிகளிடமிருந்து
ஏராளமான தொல்லைகளையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்ததாகக்
கூறுகிறார். ஆனால், அதற்கெல்லாம் இவரது மோகம் குறையவில்லை.
குற்றவாளிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள ஆயுதமேந்திய
இரண்டு மெய்க்காவலர்களை நியமித்துள்ளார். இவரைக் கான்பூர் மக்கள்
தங்க பாபா என்றே அழைக்கிறார்கள்.